விஜய் டிவி - நீயா நானாவில் சொல்லப்பட்ட நடிகர் விஜய் குறித்த கருத்து, சர்ச்சையை கிளப்பி ஓய்ந்திருக்கிறது. அன்றைய நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாமல் விஜய் பற்றிய கருத்து தெரிவிக்கப்பட்டதாக விஜய் ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின்னர் விஜய் டிவி மன்னிப்பு செய்தி வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் இதையெல்லாம் கேள்விப்படும் போது எனக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.
1 காசு கொடுத்து படம் பார்க்கும் ஒருவருக்கு, படத்தை பற்றியோ குறிப்பிடப்பட்ட நடிகரைப்பற்றியோ கருத்து கூற உரிமை இல்லையோ?
'ஏன் ஒரே மாதிரி நடிக்கிறீங்க?' என்று முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கோபிநாத் விஜயிடமே நேரில் கேட்டதாகவும், விஜயும் அதற்கான காரணங்களை விளக்கி ஒரு பதிலும் சொன்னதாக நியாபகம். இப்படி இருக்கையில் இப்பொழுது விஜய் ரசிகர்கள் உணர்ச்சிவசப் படுவது ஏன்?
2 அடுத்தது அன்றைய தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் விஜயை விமர்சித்தது நாகரிகமில்லை என்கிறார்கள். அது தவறென்றால் புதிய கீதை என்ற ( மேற்காண் நடிகர் விஜய் நடித்து 2003 ல் வெளிவந்தது) திரைக்காவியத்தில் 'எவன்டா தல' என்று பேசிய வசனமும், சச்சின் என்ற இன்னொரு காவியத்தில் 'எனக்கு ஷாலினி, ஜெயமாலினி எல்லாம் தேவையில்ல' என்று பேசிய வசனமும், இன்னபிற படங்களில் சம்பந்தமே இல்லாமல் பேசியவைகளும் எந்த நாகரிகத்தில் இடம் பெறும் என்று தெரிவித்தால் நலம்.
மேற்கண்ட வசனங்களுக்கும், நீயா நானாவிற்கும் தொடர்பில்லை என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்வதென்னவென்றால் 'நீங்கள் விதைத்தீர்கள், நீங்களே அறுவடை செய்கிறீர்கள்' என்பது தான்.




ithanai naalaka enku thaan ponayo
well said
தேவையே இல்லாமல் பிரச்சனையை கிளப்பி விட்டார்கள் விஜய் டிவிக்காரர்கள்.
ரொம்ப நாள் கழிச்சு உள்ள வந்து இருக்கீங்க..
சினிமாக்காரங்களை சொன்னா அவங்க ரசிகர்களுக்கு ஏன் இப்படி கோவம் வருதோ தெரியல. பொது வாழ்க்கைக்கு வந்தா பூச்செண்டும் விழும், கல்லடியும் விழும். பூச்செண்டு மட்டும் தான் வேணுமின்னா நீங்கள்ளாம் பொது வாழ்வுக்கே வரக் கூடாது
சர்தான்பா..!
@gopy:
in sachein , vijay vl say -
Enakku shalini, jeyamalini jothyletchumi idhellam vendave vendaam!!!
attakaasm padathula ajith oru paate vaichare athulam niabagam varaathe.
I completely agree with you. Plus, whatever the lady told about Vijay was nothing wrong or above the limits. I'm sure that everybody, including Vijay's fans, will accept whatever that was told.
On the other hand, I don't find a reason why Vijay TV should regret for this. Either they should have not telecasted the programme at all. Or they should be courageous enough to defend it! It is so silly for the TV to act this way.
விஜய்கிட்ட நியாயமெல்லாம் எதிர் பாக்கிறீங்கபோல? :-)