• RSS
  • Facebook
  • Twitter
Comments

எதுவுமே எலவசமா கெடச்சா என்ன கதியாகுங்கறதுக்கு, SMS சேவை நல்ல உதாரணம். ஆரம்பத்துல ஒரு SMS க்கு ஒரு ருபாய்ன்னு இருந்து, அப்புறம் படிப்படியா குறைஞ்சு, பத்து பைசா, அஞ்சு பைசா, ஒரு பைசான்னு கடைசில ஃபிரீ SMS ன்னு ஆயிடுச்சு. இப்பவெல்லாம் சில நெட்வொர்க்ல நாம SMS அனுப்ப அவங்க காசு தர்ற மாதிரி பிளான் எல்லாம் கூட வந்துருக்காம். 

சீக்கிரமா, மலிவா தகவல்களை பரிமாற SMS ரொம்ப உதவியா இருக்குங்கறது உண்மை தான். இரத்தம் தேவை மாதிரியான அவசர நேரங்கள்ல, SMS உயிரை கூட காக்கும். ஆனா உயிரை எடுக்கற மாதிரி SMS களும் ஏராளம். ஆரம்பத்துல குட் மார்னிங், குட் நைட்ன்னு நார்மலா ஆரம்பிச்சவங்க, அது போரடிச்சு போய் ஆளாளுக்கு தத்துவம் எழுத தொடங்கி, இப்ப செல்லு வச்சுருக்கவன்லா சாக்ரடீஸ்ங்கற மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டாங்க. எங்காவது அவசரமா போயிகிட்டு இருக்கும் போது SMS வரும். எடுத்துப்பார்த்தா “வாழ்க்கை என்பது வாழைப்பழம் மாதிரி, வாய்ல போட்ட இனிக்கும், கீழே போட்ட வழுக்கும்”  னு இருக்கும்.

SMS அனுப்பும் போதுதான், நம்மாளுங்களுக்கு பாசம் பொங்கி வழியும். என் உயிரே நீதான், நட்பின் இலக்கணம் நாம் தான்னு பொங்கி வழிவாங்க. நாளைக்கு தர்றேன்னு வாங்கிட்டு போன பணத்தை தரமாட்டாங்க, ஆனா SMS ல மட்டும் நட்புக்காக உயிரே தருவேன்னு உருகுவாங்க. உயிரெல்லாம் வேண்டா, பணத்தக் கொடுடா ம....ன்னு ரிப்ளை பண்ண தோணும். 

இவங்களுக்கு எங்க இருந்துதான் இந்த ’டே’ எல்லாம் கிடைக்குதோ. Today is Red Rose Day, Smile Day, Hugging Day, Black Dress Day இப்படி எத்தன டே.. போங்கடா டேய்!. இன்னொரு இம்சை என்னன்னா இதுல எதாவது ஒரு நெம்பரை சொல்லு, உனக்கு எப்படிபட்ட பொண்டாட்டி அமையும்ன்னு சொல்றேன்னு ஜோதிட கலைமாமணி மாதிரியான SMS களும். இதுல Reply Must ன்னு எச்சரிக்கை வேற.

இதையெல்லாம் விட “ஜெய் பிரம்மானந்தா நமக” இந்த மெசேஜை பத்து பேருக்கு பார்வேர்ட் பண்ணினா பரீட்சைல படிக்காமயே பாஸ் ஆயிடலாம்ன்னு வர்ர SMS கள். அதையும் நம்பி படிக்காம பார்வேர்ட் பண்ணிகிட்டு இருக்கற பகுத்தறிவாளர்களும் உண்டு. அதை ஸ்டூடண்ட்ஸ்க்கு அனுப்பினா பரவால்ல, பள்ளிக்கூடத்துல ஒதுங்க கூடாதுன்றதுக்காக மழைலயே நனைஞ்சுகிட்டு இருந்த என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஏன்யா அனுப்பறீங்க?

தமிழ்நாட்டுல அனுப்பப்பட்ட மொத்த SMS யும் பிரிச்சு போட்டு பார்த்தா, பாதிக்கு மேல ஒருத்தர் பேரு இருக்கும். அவருதான் ‘விஜய்’. அவரை நெனச்சாத்தான் ரொம்ப பாவமா இருக்கு. ரொம்ப கலாய்க்கறாங்க. இப்பல்லாம் அவர கலாய்ச்சு வ்ர்ற SMS களை படிக்கறதுக்கு பதிலா, அவரு படத்தையே பார்க்கலாம் போலன்னு தோணுது. 

இதுல பாதிப்பேருக்கு மேல தமக்கு வர்றத பார்வேர்ட் பண்ற ஆசாமிகள் தான். பில்லை கட்டுடா நாயேன்னு வந்துருக்கற SMS ஐ கூட படிக்காம பார்வேர்ட் பண்ற ஆசாமிகள் உண்டு.


SMSன்னால ஏற்படற இன்னொரு கொடுமை என்னன்னா, ரொம்ப நாள் கஷ்டப்பட்டு பலபேரு கால்ல விழுந்து ஒரு ஃபிகர் நெம்பர் வாங்கி ’hi' ன்னு அனுப்பிட்டு ஆவலா வெயிட் பண்ணுவோம். கரெக்டா 2 வது நிமிசத்துல மொபைல் ரிங்கும். ஆஹா சிக்கிடிச்சுடா மயிலுன்னு ஓபன் பண்ணி பார்த்தா, “ஒரு சூ ல இருந்து மூனு குரங்கு தப்பிச்சிடுச்சாம்...” னு நம்மை டேமேஜ் பண்ற SMSஐ பங்காளி ஒருத்தன் அனுப்பியிருப்பான். அப்ப வரும் பாருங்க கோபம். நல்ல வேளை நமக்கெல்லாம் நெத்திக்கண் இல்லை. 

உபயோகமா அனுப்புற SMSகள், SMS மூலமா உரையாடல் எல்லாம் தப்பே இல்ல. குறுஞ்செய்தி எல்லாம் குமரிகள் அனுப்பும் போதும், குமரிகளுக்கு அனுப்பும் போதும்தான் குதூகலமா இருக்கும். நேரங்கெட்ட நேரத்துல, மொக்கையா வர்ர குறுஞ்செய்திகள் கடுப்பை தான் உண்டாக்கும்.  அதனால தத்துவஞானிகளெல்லாம் போயி புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க. ஏன்னா, “வாழ்க்கை என்பது வாழக்கா பஜ்ஜி மாதிரி...”

20 Responses so far.

  1. தமிழ் மணம், தமிழிஷில் ஓட்டுப் போடுங்கன்னு SMS வரவில்லை. அது தவிர எல்லாம் வந்துடுச்சு...

  2. பொதுவா நாம அனுப்புற SMS செண்ட் அயிட்டம்ஸ்ல இருக்கும். நீங்க உங்களுக்கே அனுப்புன்னா அதுவே இன்பாக்ஸுல இருக்கும்.
    இதுதான் ஸார் வாழ்க்கை. வாழக்கத்துக்கோங்க..!

  3. ச்ச்ச.சோசோ.......

    போன எடுத்தா நொச்சு நொச்சுங்கிறாங்க...

    :-)

  4. அன்பின் லோகு

    நாசா - சந்திரனில் ஐசூம் நீரும் இருக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறதாம் - ஆக நாம் வெறும் சரக்கு எடுத்துக் கொண்டு அங்கு சென்றால் போதும். சரியா

  5. லோகு,

    உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளால் வெறுப்பு அடைந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.குறுஞ்செய்திகள் வாராமல் தடுக்க எளிய வழி ஒன்று உண்டு. அந்த வழியைத்தான் நான் பயன்படுத்துகிறேன். அது...

  6. //இப்பவெல்லாம் சில நெட்வொர்க்ல நாம SMS அனுப்ப அவங்க காசு தர்ற மாதிரி பிளான் எல்லாம் கூட வந்துருக்காம். //

    //“வாழ்க்கை என்பது வாழைப்பழம் மாதிரி, வாய்ல போட்ட இனிக்கும், கீழே போட்ட வழுக்கும்”//

    //பள்ளிக்கூடத்துல ஒதுங்க கூடாதுன்றதுக்காக மழைலயே நனைஞ்சுகிட்டு இருந்த என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஏன்யா அனுப்பறீங்க?//

    நல்ல நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்.

    //“வாழ்க்கை என்பது வாழக்கா பஜ்ஜி மாதிரி...” //

    ஏன்னா வாழைக்காய் மட்டும் இருந்தா பஜ்ஜி போடமுடியாது.மாவு,எண்ணை, அடுப்பு எல்லாம் வேணும். அதுமாதிரி தான் வாழ்க்கைக்கும் படிப்பு, முயற்சி, உழைப்பு வேணும்...

    எப்பூடி... முடிச்சிட்டம்ல... :))

  7. எனக்கும் இது போல குறுஞ்செய்தி வந்துச்சி... அத 18 பேருக்கு அனுப்பலன்னா.... எனக்கு கெட்டது நடக்குமாம்.(உண்மையாகவே)
    நான் அந்த 18 ட 81ன்னு மாத்தி அனுப்புன ஆளுக்கே அனுப்பிட்டேன்.... அதுக்கப்புறம் அது போல குறுஞ்செய்தி வரல... உண்மையாகவே....

    உங்க பதிவு பாராட்டதக்கது....அந்த கடைசி வரியையும் ரசித்தேன்.

  8. sakthi says:

    sms delete செஞ்சு கை தான் வலிக்குது

  9. நல்ல கருத்து தான்

  10. ரொம்பவே தேவையான கருத்து தான் லோகு. இதுல கொடுமை என்னனா ஏதாவது முக்கியமான விஷயம் கேட்டு நண்பருக்கு SMS அனுப்புவோம் ஆனா கெணத்துல போட்ட கல்லு மாதிரி ஒண்ணுமே தகவல் வராது, ஆனா இந்த மாதிரி இவ்ளோ பேருக்கு அனுப்பு அவ்ளோ பேருக்கு அனுப்புன்னு மட்டும் அனுப்புவானுங்க.

  11. //உனக்கு எப்படிபட்ட பொண்டாட்டி அமையும்ன்னு சொல்றேன்னு ஜோதிட கலைமாமணி மாதிரியான SMS களும். இதுல Reply Must ன்னு எச்சரிக்கை வேற.
    //பில்லை கட்டுடா நாயேன்னு வந்துருக்கற SMS ஐ கூட படிக்காம பார்வேர்ட் பண்ற ஆசாமிகள் உண்டு.

    ஹா...ஹா...
    ரெம்ப நகைச்சுவையா எழுதுறீங்க.

  12. Bogy.in says:

    புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

  13. Bogy.in says:

    புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

  14. ஹாஹாஹா... ரொம்பக் கடுப்புல இருக்கீங்க போல இருக்கு. நல்லாருக்கு பதிவு.

  15. நல்ல பகிர்வு நண்பரே .

    மீண்டும் வருவான் பனித்துளி !