• RSS
  • Facebook
  • Twitter
Comments


தெல்லாம் உனக்கெதுக்குடா?”

“சும்மா சொல்லுடா, தெரிஞ்சுக்கத்தான்..”

“உள்ளூர்லையே இருக்கு”

“உள்ளூர் வேண்டாம் பிரச்சனை, பக்கத்து டவுன்ல எதுனா இருக்கா”

“அதுக்கென்ன பஞ்சமா,  இரு அட்ரஸ் தர்றேன்,
பாலு சொன்னான்னு சொல்லு, ஸ்பெசல் கவனிப்பு இருக்கும்.”

“ டேய் பாதுகாப்பு எல்லாம்?”

“அதெல்லாம் அவங்க பாத்துக்குவாங்க நீ பணத்த ரெடி பண்ணு”


********

வா தம்பி! என்ன வேணும்?”

“ பாலுதான் இந்த அட்ரஸ் கொடுத்தான்.”

“ யாரு ஆட்டோ டிரைவரா?”

“ ஆமா..”

“ சரி உள்ள வா, எது வேணும்னு பாரு..”

“பரவால்ல, ஏதாவது ஒன்னு”

“ நீ போடி, ஏந்தம்பி இவ்ளோ வெக்கப்படற? ஆயிர ரூவா கொடு”

“ இ... இந்தாங்க”


**********


“இருயா.. ஏன் இவ்ளோ அவசரப்படற, இங்க தான இருக்கேன், டிரஸ்ஸை கிழிச்சுடாதே”

“ஸாரிங்க  ”

“பர்ஸ்ட் டைமா? ”

“ஆ.. ஆமாங்க”

“சரி, டிப்ஸ் 100 ருபா கொடு”

“போகும் போது தர்றேன், உங்க பேர் என்ன?”

“என் பேரா, திவ்யா, உன் பேர் என்ன?”

“ ..................”

“யோவ் இருயா, ஏன் போற”

 “என்னாச்சு தம்பி, ஏன் போற”

********

டேய் அதெல்லாம் பொய் பேரா இருக்கும்டா, அவளுக எப்பவுமே நெஜ பேரெல்லாம் சொல்ல மாட்டாளுக”

“பொய்யோ, நெசமோ.. அவ சொன்னது, சின்ன வயசுல தொலைஞ்சு போன என் தங்கச்சி பேருடா.. அப்புறம் எப்படி?”

“போடா வெளக்கெண்ணை, உன்னையெல்லாம்...”

19 Responses so far.

  1. விந்தையான நமது மனதில் நொடிப்பொழுதில் ஏற்படும் வித்தியாசமான எண்ணங்களை கதையாக கூறியிருப்பது நன்றாக உள்ளது தம்பி.

    ஆமா... கதை,முயற்சி சரி... அது என்ன மூன்றாம் பால்....

  2. :-)

    முதல் வரி படிக்கும்போதே முடிவை ஊகிக்கமுடிந்தது, ஒரு சின்ன சறுக்கல். ஆயினும் அருமை. தொடருங்கள் லோகு. :-)

  3. அருமை நண்பா...

    ஆனாலும் தலைப்பில் கதையின் முடிவை ஊகிக்க முடிகிறது...

    கதை நன்று....

  4. இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது; உள்ளத்து உணர்வுகளைப் பொறுத்தது இது.

    நல்ல முயற்சி.வாழ்த்துகள்.


  5. @ அண்ணாமலையான் :
    நன்றி அண்ணா, தொடர்ந்து வாருங்கள்.

    @துபாய் ராஜா:
    நன்றி அண்ணா.
    //அது என்ன மூன்றாம் பால்....// அறத்துப்பால், பொருட்பாலுக்கு பின் வரும் காமத்து பால் என அறிக :)

    @முரளிகுமார் பத்மநாபன்:
    நன்றி அண்ணா, இது முதல் முயற்சி, அடுத்த முறை இன்னும் முயல்கிறேன்.

    @ அகல்விளக்கு:
    நன்றி நண்பா. இது முயற்சி தான், பொறுத்தருளுங்கள் :)

    @அ. நம்பி :
    நன்றி அய்யா.

  6. யூகிக்க கூடிய கதை என்றாலும் நன்றாக இருந்தது....

  7. நல்லா இருக்கு....முதலில் படித்த உடன்
    ட்விஸ்ட் இருக்கும்னு நினைச்சேன்...
    இருந்தது...

  8. நல்ல கதைங்க.

  9. @ ஜாக்கி சேகர் :
    நன்றி அண்ணா.

    @வெற்றி-[க்]-கதிரவன்:
    :)நன்றி அண்ணா.

    @♠ ராஜு ♠ :
    நன்றி நண்பா.

    @VISA:
    நன்றி அண்ணா.


    @க.இராமசாமி:
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, தொடர்ந்து வாங்க.

  10. அன்பின் லோகு

    காம வெறி உச்சத்தில் இருக்கும் மனது சடேரென நொடியில் மாறி வெளியே போவது - ம்ம்ம்ம் இதுதான் மனித மனம். உணர்ச்சிகளின் கலவை.

    கதை நன்று - நல்வாழ்த்துகள்

  11. பல ஆயிரம் கதைகள் படித்து எழுதி வருபவர்களால் இந்தக் கதையின் முடிவை யூகிக்க முடியலாம். ஆனால் சராசரி வாசகர்களுக்கு இது நல்ல கதை..,

    மருத்துவ உலகில் செலக்டிவ் இம்பொடனஸ் என்ற ஒரு பதம் உண்டு. அதை எளிமையாக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.

    குறிப்பிட்ட சில நபர்களை தாய் சகோதரி எனச் சிலரை காமக் கண் கொண்டு பார்க்கமுடியாது. அதுதான் இது..,

    தமிழில் முத்துராமன், மஞ்சுளா நடிப்பில் ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கிறதா தல..,

  12. ரொம்ப நெகிழ்வா இருந்தது.

  13. நெகிழ்வான கதை தொடர்ந்து எழுதுங்கள். அருமை..