சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.
சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.
**********
எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.
***********
குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.
**************
இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;
காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.
**************
Categories:
கடவுள்,
கவிதை முயற்சி,
குழந்தை





அனைத்தும் அருமை.
//குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.//
அனைத்திலும் அருமை.
வாவ்..!
நல்லாருக்குய்யா.
-:)
உண்மை உண்மை லோகு
கடவுளும் குழந்தையும் - அருமையான சிந்தனை
நல்வாழ்த்துகள் லோகு
hi logu
nalla iruku but
ungalluku kathal kavithyi than ellutha nalla verum
kathal kavithai pothu niraja naal aachu
1 u plz
thusy
france
@ துபாய் ராஜா:
நன்றி அண்ணா!
@ ராஜூ :
நன்றி நண்பா!
@வெற்றி-[க்]-கதிரவன்:
நன்றி அண்ணா!
@cheena (சீனா):
நன்றி அய்யா!
@ thusy:
காதல் கவிதையா. நான் எழுதியதை படிச்சா எனக்கே காய்ச்சல் வர மாதிரி இருக்கு. So இப்போதைக்கு எழுதற எண்ணம் இல்லை பாஸ்.. :)
//சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.
எல்லாக் கவிதையும் ரெம்ப நன்றாக இருக்கிறது.
மனசே லேசான மாதிரி இருக்கிறது.
வித்தியாசமான சிந்தனை. அனைத்தையும் ரசித்து படித்தேன்!