ஒவ்வொரு குறும்பிலும்,
தன் தாய்க்கு
அவளது பால்யத்தை
நினைவூட்டுகிறது
குழந்தை.
****
கனவில் விளையாடும்
தன் தேவதை தோழிகளை
பிரிய மனமில்லாமல்,
தினமும் காலையில்
அழுகையோடு விழிக்கிறது குழந்தை!
****
திட்டிய அப்பாவை,
ரெட் ரேஞ்சர்சிடம்
சொல்லி விடலாமென
விசும்பும் தாயை
தேற்றுகிறது குழந்தை!
****
"பூச்சாண்டியிடம்
பிடித்து கொடுத்துடுவேன்"என்று
மிரட்டினாள் தாய்.
"கொடுத்துக்கோ!
எனக்கொன்னும் பயமில்லை"
என்றது குழந்தை!
அடுத்து
என்ன சொல்லி
மிரட்டுவது என தெரியாமல்
விழிக்கிறாள்,
தன் பால்யத்தில்
பூச்சாண்டிக்கு பயந்த தாய்!
****
பொம்மைகளின் மொழியில்
புலமையோடு பிறக்கும் குழந்தை,
புதுமொழி கற்கையில்
இழக்குது புலமை.
Categories:
கவிதை முயற்சி,
குழந்தை





kavithai ellaam kalakkal
//கனவில் விளையாடும்
தன் தேவதை தோழிகளை
பிரிய மனமில்லாமல்,
தினமும் காலையில்
அழுகையோடு விழிக்கிறது குழந்தை//
அருமையான உவமை லோகு.
//திட்டிய அப்பாவை,
ரெட் ரேஞ்சர்சிடம்
சொல்லி விடலாமென
விசும்பும் தாயை
தேற்றுகிறது குழந்தை!//
:))
//பொம்மைகளின் மொழியோடு
பிறக்கும் குழந்தை,
கொஞ்சம் கொஞ்சமாய்
பொம்மை மொழி மறந்து,
மனித மொழி கற்று
வளர்கிறது//
பொம்மைகளின் மொழியோடு
பிறக்கும் குழந்தை,
வளர வளர
பொய்மை மொழி கற்று
கொஞ்சம் கொஞ்சமாய்
பொம்மை மொழி மறக்கிறது.
எப்ப்ப்பூபூபூடிடிடிடி..... :))
எல்லாமே நல்லாயிருக்கு, லோகு.
//பொம்மைகளின் மொழியோடு
பிறக்கும் குழந்தை,
கொஞ்சம் கொஞ்சமாய்
பொம்மை மொழி மறந்து,
மனித மொழி கற்று
வளர்கிறது.//
இதை கொஞ்சம் டிங்கரிங் செய்தால் இன்னும் அழகான கவிதையாயிருக்குமென்பது, என் கருத்து. தவறாக நினைக்க வேண்டாம்
Kalakkal Machan
@இரும்புத்திரை:
நன்றி அண்ணா..
@துபாய் ராஜா:
நன்றி அண்ணா.. நீங்க சொன்னது கவிதை, நான் எழுதியது கவிதை முயற்சி! :)
@முரளிகுமார் பத்மநாபன்:
நன்றி அண்ணா.. உங்களை போன்றவர்களின் வழிகாட்டுதலில் தான் வளர்கிறேன்.
@anbu:
Thanks Mapla.
நல்லாயிருக்கு பாஸ்..
நல்லாருக்குங்க. வாழ்த்துகள்
ஆகா அருமையான கவிதை வரிகள் .வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளம்பெற .மிக்க நன்றி பகிர்வுக்கு ....