Saturday, November 07, 2009
ஊரெல்லாம் மழையாச்சு..
ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு
அவசர தந்தி அடித்தார் முதல்வர்..
முதல் கட்டமாய்
முந்நூறு கோடி கொடுத்தார் பிரதமர்..
பத்தவே பத்தாது
பார்த்து செய்யுங்களென மீண்டுமொரு மடல்..
ஆளுங்கட்சிக்கு திறனில்லை என
ஏசியது எதிர்கட்சி..
ஹெலிகாப்டரில் பார்வையிட்டு
ஏகத்துக்கும் வருந்தின கட்சித்தலைமைகள்.
வெள்ள நிவாரண வேட்டி, சேலை வாங்கப்போய்
கூட்ட நெரிசலில் செத்துப்போனான் கபாலி..
பொழப்பு பார்க்க கடலுக்கு போய்
பத்து நாள் ஆயிடுச்சு..
மீதமிருக்கும் ரெண்டு படி அரிசியில்
ரெண்டு நாள் தாக்கு புடிக்கலாம்..
அதுக்குள்ள மழை நிக்க,
ஆண்டவனை வேண்டிக்கிறேன்..
**********
நெல்லு போட்டு இருந்தா
ஏக்கருக்கு ஆயிரமுன்னு
அரசாங்கம் கொடுக்குதாம்..
ரேடியோவுல சொன்னாங்க..
ரெண்டு ஏக்கருக்கு
ரெண்டாயிரம் வரும்னு போனதுல
எறநூறை புடுச்சுட்டு கொடுத்தாரு
எங்கூரு தாசில்தாரு..
பியூனுக்கு பத்துருவா போக,
மீதமிருந்த பணத்தையெல்லாம்
வழியிலேயே புடிங்கிட்டான் வட்டிக்காரன்..
வெத நெல்லு வாங்கிய கடனுங்க அது..
ஊட்டுக்கு போனா
பிஸ்கோத்து
வாங்கியாந்தியான்னு கேப்பானுங்க
என் மக வயித்து பேரன்..
தப்பி பேய்ஞ்ச
பருவ மழைக்கு
எப்படிங்க தெரியும்
ஏழை விவசாயின் பசி...
அடுத்த தெருவுல யாரோ
அஞ்சு வட்டிக்கு
பணம் தர்றாங்களாம்
அவரை போய் பாத்துட்டு வர்றேங்க..
Friday, November 06, 2009
தீபாவளி... நல்லா கேக்கராய்ங்க டீட்டெய்லு...
எப்படித்தான் இப்படியெல்லாம் தொடர்பதிவு ஆரம்பிக்கறாங்கன்னு தெரியல.. எந்த லாட்ஜ் ல ரூம் போட்டு யோசிக்கறீங்க மக்கா.. ஏற்கனவே அண்ணன் அரவிந்த் சொன்ன ரெண்டு தொடர்பதிவை எழுதலை.. (காரணம்: என்ன எழுதறதுன்னு தெரியலை.. ).. இப்போ அன்பு நண்பர் அன்பு, அன்போட கூப்பிடு இருக்கார்.. இதையாவது எழுதலாமேன்னு நானும்...
1)உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
நம்மளை பத்தி சொல்லனும்னா சிறு குறிப்பு எல்லாம் பத்தாது, பெரும் காவியம் தான் எழுதனும்.. இருந்தாலும் சுருக்கி சொல்றேன், கவனமா கேட்டுக்கங்க.. ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் நோட்ஸ் எடுத்துக்கங்க..
"கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்..
பத்து பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்...
அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன்..
பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்.... "
போதுமா... இன்னும் கொஞ்சம் சொல்லவா..
2)தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
அந்த படத்தில் நடித்த 'பாவனா'...
தீபாவளி பண்டிகை என்றால் மறக்க முடியாத சம்பவம்லா எதுவும் இல்ல..எல்லாமே சந்தோசம் தான்.. எதை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியலை..
3)2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?
15 ந்தேதி சேலத்துல மாநாடு, 16ந்தேதி ஊட்டில ஊர்வலம், 17ந்தேதி நா எங்க இருந்தேன்னு எனக்கே தெரியல..
ம்ம்ம்.. வீட்ல தான் இருந்தேன், எந்த ஊர்னா கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கிட்டம்பாளையத்துல.. கதவு எண் 29/26B..
4)தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்?
எப்பவும் அதே ஊர்லதான், குடும்பத்தோடும் நண்பர்களோடும்.. முந்தைய வருடம் வரை நிறைய பட்டாசு, கொஞ்சம் கிரிக்கெட், கொஞ்சம் டிவி, ஒரு சினிமா என்று இருக்கும்.. இம்முறை பட்டாசு மட்டும் இல்லை..
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா?
வாங்கியது தான், திருப்பூரில்.... (கடை பேரு, பில் நெம்பர், சட்டை கலரு எல்லாம் சொல்லனுமா.. )
6)உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள்?
வடை, பாயாசம் - அம்மா செய்தது ..
மைசூர் பாகு - நெல்லை லாலா ஸ்வீட்ஸ், திருப்பூரில் வாங்கியது..
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?
குறுஞ்செய்தி சிலருக்கு, தொலைபேசியில் பேசும் போது சிலருக்கு, நேரில் சிலருக்கு..
8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா?
தொலைக்காட்சி நிகழ்ச்சி கொஞ்சம், வெளியில் கிரிக்கெட், சினிமா என்று கொஞ்சம்.. வீட்டில் நண்பர்கள், குடும்பத்தோடு அமர்ந்து சந்தோசமாக பேசி, சிரித்து, கலாய்த்து மகிழ்ந்தோம்..
9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள்?
தீபாவளி அன்று என்று குறிப்பிட்டு செய்வதில்லை.. இயலும் போது செய்வதுண்டு..
ஒரு காலத்துல பட்டாசு பாலு கணக்கா பட்டாசோடு திரிஞ்ச பட்டாசு பிரியன் நான். இம்முறை பட்டாசு வெடிக்காமல் சுற்றுசூழலுக்கும், உங்களுக்கும், எனக்கும் பெரிய உதவி செய்தேன்..
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல...
10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?
"போதும்.. இத்தோட நிறுத்திக்கிவோம்"ன்னு நான் சொல்றேன்..
"இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ளே எப்படி நிறுத்தறதுன்னு" யாராவது நெனச்சீங்கன்னா நீங்களே வாண்டேடா எழுதுங்க.. தப்பில்ல..
Tuesday, November 03, 2009
தப்பில்லா தப்பு
தப்பினால் நேரும்
தப்பிலிருந்து தப்பிக்க,
தப்பே வேண்டாமென்றிருந்தேன்.
தப்பிப்போய் மீண்டும்
தப்பில்லா தப்பை செய்ய விளைகையில்,
தப்பு தப்பி,
தப்பு நேர்ந்தது.
தப்பின் சுகம் போய்,
தப்பு
தப்பியதன் கோபமே
தங்கியது.
மீண்டும்
தப்பு தப்பியதால்
மீதமிருந்த
தப்புக்கள் தப்பின..
Sunday, October 25, 2009
இந்த வாரம் இப்படித்தான் ...

பிரபல பதிவர் கார்க்கி அவர்களுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது எங்களை அறிந்த சிலருக்கு தெரியும். இந்நிலையில் எனது முந்தைய பதிவு அவரை தாக்கி எழுதபட்டிருப்பதாக சிலர் அவரிடம் கூறியதாக அவர் மூலமே அறிந்தேன். அது முற்றிலும் தவறானது. எழுத்தாற்றலும், பதிவுலகில் மிகுந்த செல்வாக்கும் கொண்டிருக்கும் அவரை கிண்டல் செய்ய நான் எப்போதும் நினைத்ததில்லை. அப்படி யாராவது நினைத்தால் அது அவர்களது மனப்பிராந்தியே.
************
Windows XP பாடாய் படுத்துகிறது. இந்த வாரம் மட்டும் திரும்ப திரும்ப OS இன்ஸ்டால் செய்ய நேரிட்டது. உபுண்டு லினக்ஸ் பயன்படுத்த எளிமையாக இருந்த போதும், பழகும் வரை சிரமமாக இருக்கிறது. கூடிய விரைவில் விண்டோசை முற்றிலும் கைகழுவி விடுவேன்.
லினக்ஸ் முற்றிலும் இலவசமாக அதன் அதிகாரபூர்வ தளத்திலேயே கிடைக்கிறது.
*********
தனியார் டி.டி.எச் சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் கொள்ளை அடிக்கின்றன. நான் பயன்படுத்தும் ரிலையன்சின் 'பிக் டிவி' யில் தமிழ் சேனல்களுக்கு மட்டுமே மாதம் 130 பிடுங்குகிறார்கள். அது தவிர Star Cricket க்கு 28 ரூபாயும், Neo Cricket க்கு மாதம் 40 ரூபாயும் கேட்கிறார்கள். நல்ல வேளையாக தூர்தர்சனிலேயே மேட்ச் ஒளிபரப்பாவதால் பணம் மிச்சம்.
*******
கடந்த வாரங்களில் எங்கள் பகுதியில் கணிசமான விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அதை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதுமே இந்த மாதத்தில் பூகம்பம், படகு விபத்து, விமான விபத்து, தீவிரவாதம் ஆகியவற்றால் பலர் இறந்ததை சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் காரணம் சனி பெயர்ச்சி தான் என்றும், சனி தான் சக்தியுள்ள கிரகம் என்றும் சொன்னார்..
சனி பகவானுக்கே வெளிச்சம்.
*******
டுவிட்டர் பயன்படுத்துவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் போர் அடித்தாலும் கணிசமான பின் தொடர்பவர்கள் (Followers) வந்த பின் டுவிட்டது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. பொதுவாக மாலை நேரங்களில் தான் டுவிட்டர் களை கட்டுகிறது.
என்னோடு டுவிட்ட www.twitter.com/acchamthavir
*******
சன் மியுசிக் சேனலில் இரவு 11 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் "நினைத்தாலே இனிக்கும்" நிகழ்ச்சி இனிமை. காதிற்கினிய பழைய பாடல்காட்சிகளை பார்க்க / கேட்க முடிகிறது. நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவரின் தமிழும் ரசிக்க வைக்கிறது.
*******
ரசித்து சிரிக்க ஒரு அட்டகாசமான காமெடி.. (எவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டாண்டா.. )
Saturday, October 24, 2009
'ஆப் ஃபாயில்' ஆறுமுகம் - 25
டிஸ்கி : எந்த வித உள்நோக்கமும் இல்லாமல் 'ஆனந்த விகடன்' வார இதழில் வரும் பிரபலங்கள் 25 பகுதியை தழுவி நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.

எங்க ஏரியாவில் 'ஆப்பாயில்' ஆறுமுகத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக இருக்கும் ஆறுமுகம் ஒருமுறை குடித்து விட்டு நடு ரோட்டில் ஆப்பாயில் போட்டதால் அவருக்கு இந்த பெயர். சுதந்திர பறவையான அவரை பற்றிய துணுக்கள் இங்கே.

எங்க ஏரியாவில் 'ஆப்பாயில்' ஆறுமுகத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக இருக்கும் ஆறுமுகம் ஒருமுறை குடித்து விட்டு நடு ரோட்டில் ஆப்பாயில் போட்டதால் அவருக்கு இந்த பெயர். சுதந்திர பறவையான அவரை பற்றிய துணுக்கள் இங்கே.
- சமீப காலமாக தினமும் இரவு ஏதாவது ஒரு ராங் நம்பருக்கு போன் பண்ணி பிகர் கிடைத்தால் கடலை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
- இடம், பொருள், வயசு, சைசு என எதையும் பார்க்காமல் கடலை போடுவது இவரது வழக்கம். போன வாரம் துணிக்கடைக்கு போயிருந்த போது அங்கிருந்த பொம்மையிடம் கூட ஒரு மணி நேரம் பேசியது ஹைலைட்.
- நமீதாவை மட்டுமே தலைவி என்றழைப்பார், ஷகிலாவை ரசித்த போதும் நமீதா அளவுக்கு வராதுடா என்பது இவர் கருத்து. இப்போது புவனேஸ்வரி மீதும் ஒரு கண் உண்டு.
- நீலமும், பச்சையும் பிடித்த கலர்கள்.. நீலப்படம் பார்ப்பதும், பச்சை பச்சையாய் பேசுவதும் தான் காரணம் என்று சொல்லுவார்.
- இவர் ஒரு கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட்டை பற்றி பேசுவது ரொம்ப புடிக்கும். மேட்ச் நடக்கும் போது யாருக்காவது போன் பண்ணி சச்சின் எத்தனை கோல் என்று கேட்டு கொண்டிருப்பார்.
- இது தவிர பச்ச குதிர தாண்டுதல், கோலி குண்டு என இன்னும் சில தேசிய விளையாட்டுகளிலும் ஆர்வம் உண்டு.
- எப்பவாவது மூடு சரியில்லை என்றால் மட்டும் தம்மடிப்பார், தம்மடிக்கும் போது மட்டும், பான்பராக் போடுவார், பான்பராக் போட்டால் மட்டும் லைட்டா தண்ணி அடிப்பார், போதையில் இருக்கும் போது மட்டும்..... மத்தபடி கெட்ட பழக்கம் எதுவும் இல்லை.
- சிக்கற பிகர் கூட எல்லாம் கடலை போட்டாலும், சில பிகர்களுக்கு மட்டும் தான் EC Recharge பண்ணி தருவார்.
- நல்ல அனுபவம் உள்ள ஆள்களுடன் மட்டும் தான் குடிக்க போவார், புது பசங்களோட போய் அவங்க மட்டையாயிட்டா சிக்கல் என்று காரணம் சொல்லுவார்.
- ஸ்கூல் பொண்ணுகளை பார்ப்பது இவருக்கு பிடித்த ஒன்று. பிடிக்காதது ஸ்கூல் பொன்னுகளோடு பேசுவது. ஏதாவது பேசினால் கூட்டத்தில் 'அங்கிள்' என்று சொல்லிடுவாங்களே என்று பயப்படுவார்.
- இவர் ஏரியா பலான தியேட்டரில் ரிலீஸ் ஆகும் எல்லா ஷகிலா படத்தையும் பார்த்திருக்கிறார். அந்த தியேட்டரில் இவருக்கு தனி அக்கவுண்ட் இருக்கிறது.
- குடிச்சுட்டு வீட்டில் இருக்கும் போதும், ஒயின் ஷாப் லீவு அன்றைக்கும் பிட்டு காட்சிகளை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு பிடிச்ச காட்சி _____
- A,B,C,D நாப்பது எழுத்து என்ற அளவில் ஆங்கிலம் தெரிந்திருந்த போதும் பேஷன் டிவியை இரவு முழுக்க பார்ப்பார்..
- ஆங்கில இசை சானல்களை அதிகம் பார்ப்பார். காரணம் இசை பிரியம் இல்லை. வால்யூமை மியூட் பண்ணி விட்டு ஷகிராவின் இடுப்பை ரசித்து கொண்டிருப்பார்.
- உலகமயமாக்களை எதிர்ப்பவர் என்ற போதிலும், பாரின் சரக்கு கிடைத்தால் சந்தோஷமாக குடிப்பார்.
- மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, ரோஸ் போன்ற கண்ணைப்பறிக்கும் வண்ண உடைகளையே அணிவார். அப்பத்தாண்டா நாலு பொண்ணுங்க திரும்பி பார்ப்பாங்க என்பார்.
- சைக்கிளே சரியாக ஓட்டத்தெரியாது என்றாலும், நண்பர்களின் பைக் மீது ஏறி உக்காந்து வித விதமாக படம் எடுத்துக்கொள்வார்.
- வீட்டில் இவரை தண்ணி தெளித்து எப்படியோ தொலஞ்சு போடா என்று விட்டு விட்டாலும், உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு தானே போய் சைட் அடித்து விட்டு, முதல் பந்தியில் சாப்பிடுவதை விரும்புவார்.
- படிக்கத்தெரியாது என்றாலும் படம் பார்ப்பதற்காகவே வண்ணத்திரைக்கும், சினிமா எக்ஸ்பிரஸ்க்கும் சந்தாதாரராக இருக்கிறார்.
- தளபதி நடிகர் தன்னை விட பர்சனாலிட்டியில் கம்மிதான் என்று நினைத்தாலும் அவரது அந்த கால சங்க கவி படங்கள் இவருக்கு ரொம்ப புடிக்கும்.
- எந்த மொழியும் எழுத படிக்க தெரியாதே தவிர, நிறைய மலையாள படம் பார்த்து மலையாளம் பேச கற்று கொண்டுள்ளார்.
- பெட் அனிமல் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும், அவர் ஏரியா ஒயின்ஷாப் அருகில் உள்ள ஒரு தெரு நாய்க்கு தினமும் பொறை வாங்கி போடுவார்.
- எப்பவாவது சரக்கு ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுத்து விட்டால், அது தனக்கு பெருத்த அவமானமாக கருதி அடுத்த நாள் முழுதும் குடிக்க மாட்டார்.
- நள்ளிரவில் வெளியே வரவே பயப்படும் அளவுக்கு வீரம் இருந்தாலும், நடக்கும் போது காலரை தூக்கி விட்டுக்கொண்டே நடப்பார்..
- பஸ்சில் போகும் போது எப்பவும் புட் போர்டில் தொங்கி கொண்டு தான் போவார். ஒருமுறை கீழே விழுந்து முன்னாடி மூணு பல் எகிறியபோதும் அந்த பழக்கத்தை மாற்றவில்லை.
Labels:
அனுபவம்,
சும்மா,
ஜோக்ஸ்,
துணுக்குகள்,
நட்பு,
வாய்க்கொழுப்பு



